Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 17:52

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 89%
  • காற்று 6 km/h
  • கொழும்பு 24°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 26°
  • வவுனியா 24°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
வடக்கு செய்திகள்

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

Puthiya Kural AI Summary – Quick Read

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல், மருத்துவமனையின்…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல், மருத்துவமனையின் அபிவிருத்திக் குழுவினருக்கும் வன்னித் தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்றது.

மாவட்ட பொது மருத்துவமனையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மருத்துவமனை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன், செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாவட்ட பொது மருத்துவமனைக்கு உள்ளகப் பயிற்சி மருத்துவர்களை நியமித்தல், புதிய ஆளணி மீளாய்வுக்கு அமைவாகத் தேவையான மருத்துவர் ஆளணியை ஒதுக்குதல், நிரந்தரப் பொது மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஏனைய விசேட மருத்துவ நிபுணர்களை நியமிக்க வேண்டிய தேவை என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தற்போது நிலவும் நிருவாக மற்றும் பௌதிக வளப் பற்றாக்குறைகள், அவற்றால் மருத்துவச் சேவைகளை வழங்குவதில் ஏற்படும் நடைமுறைச் சவால்கள் என்பனவும் கலந்துரையாடலில் முக்கியமாக ஆராயப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உரிய தரத்திலான மருத்துவச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்காக, இனங்காணப்பட்டுள்ள ஆளணி மற்றும் உட்கட்டமைப்புத் தேவைகளை சம்பந்தப்பட்ட தரப்புகளின் கவனத்திற்குக் கொண்டுசென்று உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.