Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 14:51

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 89%
  • காற்று 8 km/h
  • கொழும்பு 25°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 26°
  • வவுனியா 25°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
மலையக செய்திகள்

நோர்வூட் ’அஸ்வெசும’ ரூ. 6 கோடி மோசடி: அதிர​டி அறிவிப்பு

Puthiya Kural AI Summary – Quick Read

ஹேவா நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள 'அஸ்வெசும' நலன்புரி திட்ட நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் குழுவொன்று குறித்து…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

சுதத் எச். எம். ஹேவா

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி திட்ட நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் குழுவொன்று குறித்து, பொது நிர்வாக அமைச்சிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன்:

“நோர்வூட் பிரதேச செயலகத்தினுள் இடம்பெற்றுள்ள ‘அஸ்வெசும’ நிதி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின்போது, அதிகாரி ஒருவர் தானாக முன்வந்து இந்த மோசடியுடன் தனக்குத் தொடர்பிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், மேலும் சிலர் இம்மன்னிக்க முடியாத மோசடியுடன் தொடர்புடையமை தெரியவந்துள்ளது.

இந்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமூர்த்தி அதிகாரிகள், அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த சிலர் இந்த ‘அஸ்வெசும’ நிதி மோசடியுடன் தொடர்புடையமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இந்த ‘அஸ்வெசும’ நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு அதிகாரிகள் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஏனையோரின் ‘அஸ்வெசும’ நிதியை சட்டவிரோதமான முறையில் தமது கணக்குகளில் வைப்புச் செய்துகொண்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஹற்றன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்களின் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளையில், இந்த நிதி மோசடியின் பெறுமதி சுமார் 6 கோடி ரூபாயை நெருங்குவதனால், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.