Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 14:51

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 89%
  • காற்று 8 km/h
  • கொழும்பு 25°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 26°
  • வவுனியா 25°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
வடக்கு செய்திகள்

விண்ணாங்கம்பிட்டி மீள்குடியேற்றம் மற்றும் ஏம்பைக்குளம் மின்னிணைப்பு தொடர்பில் ரவிகரன் எம்.பியிடம் மகஜயர் கையளிப்பு

Puthiya Kural AI Summary – Quick Read

விஜயரத்தினம் சரவணன் வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில், பட்டிக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழ்மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

விஜயரத்தினம் சரவணன்

வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில், பட்டிக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழ்மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான விண்ணாங்கம்பிட்டிக் கிராமத்தை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும், ஏம்பைக்குளம் கிராமத்திற்கான மின்னிணைப்பினை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் மகஜயர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் 18.10 2026இன்று நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி கோசலை, இலங்கைத தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளையின் தலைவர் வைரமுத்து பூபாலசிங்கம், அப்பகுதி மக்கள் இணைந்து குறித்த மகஜர்களை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளித்தனர்.

குறிப்பாக அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக கடந்த 11.10.2026அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மீள்குடியமர்த்தப்படாமலுள்ள விண்ணாங்கம்பிட்டிப் பகுதிக்கும், மின்னிணைப்பு இன்றி மக்கள் இடர்படும் ஏம்பைக்குளம் கிராமத்திற்கும் நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், கோரிக்கைகளை எழுத்துமூலமாக தம்மிடம் கையளிக்குமாறும் அப்பகுதி மக்களிடம் தெரிவித்திருந்தார். அதற்கமைவாகவே 18.10.2026இன்று குறித்த மகஜயர்கள் இன்று நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த விண்ணாங்கம்பிட்டிக் கிராமத்தினை மீள்குடியமர்த்துவது தொடர்பிலும், ஏம்பைக்குளம் கிராமத்திற்கு மின்னிணைப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.