Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 17:52

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 89%
  • காற்று 6 km/h
  • கொழும்பு 24°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 26°
  • வவுனியா 24°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
முக்கிய செய்தி

கிழக்கில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் “மனித எலும்புகள் வெளிப்பட்டன”

Puthiya Kural AI Summary – Quick Read

தற்செயலாக எலும்புகள் ஏதுமு் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மனிதப்புதைகுழி என்ற சந்தேகத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட கிழக்கு மாகாணத்தின்…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

தற்செயலாக எலும்புகள் ஏதுமு் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மனிதப்புதைகுழி என்ற சந்தேகத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட கிழக்கு மாகாணத்தின் ஒரு பிரதேசத்தில் இருந்து, மனித எலும்புகளாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் எலும்புத் துண்டுகளை அகழ்வாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். .

குருக்கள்மடம் பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கைகள் சுமார் இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி முபாரக் முஹஸ்ஸம், பிராந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“அங்கு மனித எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என நம்பக்கூடிய பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித மண்டையோடுகள் உள்ளிட்ட பல எலும்புக்கூடுகள், வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஆய்வுகளுக்காக சட்ட மருத்துவ அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் இந்த அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையும் கிடைத்த பின்னர், இது தொடர்பான முழுமையான விபரங்களை எங்களால் வழங்க முடியும்.”

மனிதப்புதைகுழியொன்றை தேடுவதற்காக, தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது இடம் மட்டக்களப்பின் குருக்கள்மடமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும், 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்களின் உடல்கள் இருப்பதாகக் கூறப்படும் அந்தப் பகுதியில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 28 இலட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் 1ஆம் திகதி வரை மூன்று நாட்கள் மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க எதனையும் கண்டுபிடிக்காமல் நிறைவடைந்தன. அகழ்வுப் பணிகளுக்காக அடையாளம் காணப்பட்ட பகுதியில் சுமார் ஆறு அடி ஆழத்திற்குத் தோண்டியபோது கடல் நீர் வெளிப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பணிகள் நிறைவடைந்தன.

அதன் பின்னர், முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூப் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அருகிலுள்ள மற்றொரு பகுதியில் 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஒன்பது நாட்கள் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் கண்காணிப்பின் கீழ் இந்தப் பணிகள் நடைபெற்றன.

மனிதப்புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் அந்த இடத்தில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 2025ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.