Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 14:51

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 89%
  • காற்று 8 km/h
  • கொழும்பு 25°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 26°
  • வவுனியா 25°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
முக்கிய செய்தி

செம்மணி மனிதப்புதைகுழி வழக்கு: முதலாவது நிபுணர் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

Puthiya Kural AI Summary – Quick Read

இலங்கையில் இதுவரை அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழி தொடர்பான முதலாவது நிபுணர் அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில்…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

இலங்கையில் இதுவரை அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழி தொடர்பான முதலாவது நிபுணர் அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் 110 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது மீட்கப்பட்ட 583 மனித எலும்புக்கூடுகளுடன் எடுக்கப்பட்ட பிற பொருட்கள் குறித்து ஆய்வு செய்து, தடயவியல் தொல்லியல் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் தொல்லியல் நிபுணர் அனுஷா வன்னிநாயக்க ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்த அறிக்கை 190 பக்கங்களைக் கொண்டுள்ளது.

அத்துடன், செம்மணியில் புதைக்கப்பட்ட பாடசாலை மாணவியான கிரிஷாந்தி குமாரசுவாமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, அவரையும் அவரது தாயாரையும் அயலவர் ஒருவரையும் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவச் சிப்பாயிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பாக இருந்த தொல்லியல் நிபுணரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையைப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் தொடர்புடைய தரப்பினருக்கும் அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (ஒக்டோபர் 19) யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் மனித உரிமைகள் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.  

குழந்தைகள் உட்பட இதுவரை சுமார் 600 மனித உடல்களின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள செம்மணி மனிதப் புதைகுழியைச் சுற்றியுள்ள பகுதியில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான மனிதர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்த, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

“குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இரண்டு மனுக்களைச் சமர்ப்பித்தது. முதலாவது மனுவில், இந்த மாதிரிகளை விரைவாக C14 பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரப்பட்டது. இரண்டாவது மனுவில், செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலம் தொடர்பாக விசாரணை நடத்தவும், அவரிடமிருந்து வாய்மொழி வாக்குமூலம் பெறவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. சோமரத்னவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.”

செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புகளின் காலத்தைத் தீர்மானிப்பதற்கான பரிசோதனைகளுக்கு அவற்றை அனுப்புவது தொடர்பில் ஒரு மாதத்திற்குள் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணி நிரஞ்சன் மேலும் தெரிவித்தார்.

“அதேபோன்று, C14 பரிசோதனைக்கு அனுப்புவது தொடர்பில் அடுத்த மாதம் 19ஆம் திகதி நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.”

ஒரு வருடத்திற்கும் மேலாக மூன்று கட்டங்களாக, மொத்தம் 110 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் மூலம் செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து குழந்தைகள் உட்பட 583 பேரின் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் 2026 ஒகஸ்ட் 19ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

நீதி கிடைக்காமலேயே மணலால் மூடப்பட்டிருந்த பாரிய மனிதப் படுகொலையின் உண்மைகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியான செம்மணியில் 2025 மே 15ஆம் திகதி முதல் ஒரு வருடத்திற்கும் மேலாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தப் பணிகளின்போது மீட்கப்பட்ட மனித எலும்புகள் இந்துக்கள் தமது மதச் சடங்குகளின்படி அடக்கம் செய்யப்பட்டவை அல்ல என்பது உறுதிப்படுத்தியுள்ளது. அவற்றுடன், குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், பாடசாலைப் பைகள், மழை அங்கி மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட 160-ற்கும் மேற்பட்ட  பிற பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.

செம்மணி மனிதப்புதைகுழியில் சட்டவிரோதமாக அல்லது சட்டத்திற்கு புறம்பான வகையில் கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் சிசுக்கள் புதைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2025 செப்டெம்பரில் தெரிவித்தது.

செம்மணியில் மண்ணுக்கு அடியில் மூடப்பட்டுள்ள இந்தப் பெருந்தொகையான மனிதர்களின் குவியலுக்குள் தமது அன்புக்குரியவர்களின் தலைவிதியும் மறைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், தந்தையர்கள், சகோதரர்கள், சகோதரிகள், மனைவியர் மற்றும் பிள்ளைகள் தொடர்ந்து ஒரு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் தடைகளுக்கு மத்தியிலும், 2025 ஜூன் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சென்றார். அதன்பின்னர், ஒரு வருடம் கழித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவும் அங்கு சென்றது. இந்தச் சந்தர்ப்பங்களில் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் சுமார் 400 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னரே, முதல் தடவையாக செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடச் சென்ற சட்டத்தரணியும் நீதியமைச்சருமான ஹர்ஷன நாணயக்கார, சர்வதேசத் தலையீட்டைத் திட்டவட்டமாக நிராகரித்ததுடன், குற்றவாளிகள் யார் என்பதைப் பெயரிட்டு தெரிவிக்குமாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமே கோரிக்கை விடுத்தார்.