Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 17:52

இலங்கை வானிலை
26°C
யாழ்ப்பாணம்
தூறல்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 91%
  • காற்று 5 km/h
  • கொழும்பு 24°
  • மட்டக்களப்பு 25°
  • திருகோணமலை 25°
  • வவுனியா 24°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
முக்கிய செய்தி

உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அரசாங்கம் மதித்து நடக்கும்: ஜனாதிபதி

Puthiya Kural AI Summary – Quick Read

உயர் நீதிமன்றம் உட்பட நீதித்துறையினால் வழங்கப்படும் தீர்ப்புகளை அரசாங்கம் உறுதியாக மதித்து நடக்கும் என்றும், அந்தத் தீர்ப்புகளுக்கு அப்பால் சென்று எந்தவொரு…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

உயர் நீதிமன்றம் உட்பட நீதித்துறையினால் வழங்கப்படும் தீர்ப்புகளை அரசாங்கம் உறுதியாக மதித்து நடக்கும் என்றும், அந்தத் தீர்ப்புகளுக்கு அப்பால் சென்று எந்தவொரு முடிவையும் எடுக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை(18) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

“தற்போது சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக, கடந்த காலங்களில் சலுகைகளையும் சட்டப் பாதுகாப்பையும் அனுபவித்து வந்தவர்கள், தற்போது முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

பாராளுமன்றமே சட்டங்களை இயற்றுகின்றது; அச்சட்டங்களின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களமும், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் வழக்குகளைத் தாக்கல் செய்கின்றன. லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்; இறுதியாக நீதித்துறை அது தொடர்பான தீர்ப்புகளை வழங்கி தீர்மானிக்கின்றது.

உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியவுடன், சிலர் ‘இல்லை, அதை ஒதுக்கி வையுங்கள்’ என்று கூச்சலிடத் தொடங்குகிறார்கள். அவ்வாறு நடந்தால் சட்டத்தின் ஆட்சி எங்கே இருக்கும்?

சில குழுக்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நீதிமன்றத் தீர்ப்புகளை நிராகரித்தால், ஒரு நாட்டை ஒருபோதும் கொண்டு நடத்த முடியாது.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை உரிய நிறுவனங்களிடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ளதுடன், நீதித்துறை எட்டும் முடிவுகளையும் மதித்து நடக்கின்றது.

நாம் நீதித்துறை வழங்கும் தீர்ப்புகளுக்குக் கட்டுப்படுகிறோம்; அதற்கு அப்பால் சென்று வேறு எந்த முடிவுகளையும் எங்களிடமிருந்து எதிர்பார்க்க வேண்டாம்” என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்