Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 17:52

இலங்கை வானிலை
26°C
யாழ்ப்பாணம்
தூறல்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 91%
  • காற்று 5 km/h
  • கொழும்பு 24°
  • மட்டக்களப்பு 25°
  • திருகோணமலை 25°
  • வவுனியா 24°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
அம்பாறை

வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு

Puthiya Kural AI Summary – Quick Read

சம்மாந்துறை சேகப்பற்று வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச செயலாளர்…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

சம்மாந்துறை சேகப்பற்று வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா நேரடியாகச் சம்பவ இடத்திற்கு நேற்றைய தினம் (21) விஜயம் செய்து நிலமையைப் பார்வையிட்டார்.

வயல்வெளியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்த யானையின் தீவிர நிலையைக் நேரில் அவதானித்த அவர், உடனடியாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியுள்ளார்.

வனவிலங்கு மருத்துவக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, யானையின் உடல்நிலையைப் பரிசோதித்து அதற்குத் தேவையான அவசர மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும், அதைப் பாதுகாப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதேச செயலாளர் கடுமையாக வலியுறுத்தினார்.   இந்தத் திடீர் கள விஜயத்தின் போது, சம்மாந்துறை கிராம சேவகர் ஜீ. சாஜீத் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் உடனிருந்தனர்.

குறித்த யானை எந்தக் காரணத்தினால் இவ்வாறானதொரு ஆபத்தான நிலைக்குள்ளானது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. யானை நோய்வாய்ப்பட்டதா அல்லது மனித-யானை மோதல் போன்ற ஏதேனும் அசம்பாவிதங்களால் காயமடைந்ததா அல்லது குப்பைகளை உண்டதால் ஏற்பட்ட உடலியல் கோளாறா என்பது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் விரிவான பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது