Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 17:52

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 89%
  • காற்று 6 km/h
  • கொழும்பு 24°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 26°
  • வவுனியா 24°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
கிழக்கு செய்திகள்

யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை

Puthiya Kural AI Summary – Quick Read

பாறுக் ஷிஹான் கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி  களப் பாதுகாப்புப் படைப் பகுதியின் சம்மாந்துறை…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

பாறுக் ஷிஹான்

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி  களப் பாதுகாப்புப் படைப் பகுதியின் சம்மாந்துறை பிரிவு எண் 4 இல் அமைந்துள்ள நெல் வயலில்  நேற்று (21) காலையில் காட்டு யானை ஒன்று எழ முடியாமல் விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் வனவிலங்கு அதிகாரிகளின் தகவல்படி  சுமார் 15 வயதுடைய ஆண் யானை ஒன்றே இவ்வாறு நெல் வயலின் நடுவே பலவீனமடைந்து வீழ்ந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மனிதர்களால் வீசப்படும் கழிவுகள் மற்றும் குப்பைகளை உண்டதன் காரணமாக  ஏற்பட்ட கடுமையான செரிமானக் கோளாறு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே இந்த யானை சுயநினைவிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வயலில் விழுந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற வனவிலங்கு அதிகாரிகள்  யானையின் வாயினுள் சிக்கியிருந்த ஆபத்தான பொலித்தீன் கழிவுகளைக் குச்சி ஒன்றின் உதவியுடன் மிகவும் நுணுக்கமாக  அகற்றியுள்ளனர். தொடர்ந்து பலவீனமாக இருக்கும் அந்த யானைக்குப் புத்துணர்ச்சியூட்டும் வகையில் பழங்கள் உணவாக வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும்  குறித்த யானைக்கு வனவிலங்கு சுகாதாரப் பிரிவினரால் அவசர மருத்துவச் சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்  யானையை மீண்டும் முழுமையாகக் குணப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.