Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 17:52

இலங்கை வானிலை
26°C
யாழ்ப்பாணம்
தூறல்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 91%
  • காற்று 5 km/h
  • கொழும்பு 24°
  • மட்டக்களப்பு 25°
  • திருகோணமலை 25°
  • வவுனியா 24°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
தமிழ்நாடு

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இராஜினாமா விவகாரம்!

Puthiya Kural AI Summary – Quick Read

தமிழக சட்டசபையில் இன்று (25) இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.&nbsp…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

தமிழக சட்டசபையில் இன்று (25) இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. 

இதில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் தெரிவிக்கையில், 6 தொகுதியில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம்? கூறுவர் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “இராஜினாமா செய்யப்பட்ட 6 தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அந்த தொகுதி மக்களின் குறைகள் கேட்கவும், தேவைகளை நிவர்த்தி செய்யவும் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரிவித்தார். 

“6 தொகுதிகளின் எம்எல்ஏக்கள் இராஜினாமா செய்துள்ளதால் அந்த தொகுதி மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பொறுப்பு அமைச்சரால் தொகுதி பிரச்னையை முழுதுமாக அறிந்துகொள்ள முடியாது என்பதால்தான் சட்டப்பேரவை உறுப்பினர் தேவை” என தெரிவித்தார். 

அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொறுப்பு அமைச்சர்கள் மொத்த தொகுதி பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள முடியாது, எம்.எல்.ஏ.க்கள் தான் அந்த பணியை செய்ய முடியும் என்பதால்தான் சட்டப்பேரவை உறுப்பினர் தேவை” என்றார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “6 சட்டமன்ற தொகுதிகளில் விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் ஆர்வம், அதில் மாற்று கருத்து கிடையாது, அதில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்பதிலும் மாற்று கருத்து கிடையாது” என்று தெரிவித்தார். 

அமைச்சர் செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் இபிஎஸ் சொன்னதெல்லாம் வழக்கில் இருக்கிறது. அதை அவைகுறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மைக் அணைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குதிரை பேரம் பற்றிய பேச்சை அவை முன்னவர் செங்கோட்டையன் தவிர்த்திருக்க வேண்டும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தினார். 

தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர் வாபஸ் பெறவில்லை. ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெற்றுவிட்டு இராஜினாமா செய்துவிட்டு ஏன் தவெகவில் சேர வேண்டும்? என கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவை மரபை மீறி சத்தமாக பேசவே, உடனே சபாநாயகர் எழுந்து நின்று இது என்ன பொதுக்கூட்டமா? இங்கு என்ன பொதுக்கூட்டமா நடத்துகிறோம்? என கோபமாக பேசினார். பேச அனுமதிக்கவில்லை என்றால் நிற்கதான் செய்வோம் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் பேச வேண்டும். உங்கள் உடலை வருத்திக்கொள்ளக்கூடாது என்று சொல்கிறேன். ‘ என்று சபாநாயகர் பேசினார். இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.