Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 14:51

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 89%
  • காற்று 8 km/h
  • கொழும்பு 25°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 26°
  • வவுனியா 25°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
அம்பாறை

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்: அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை

Puthiya Kural AI Summary – Quick Read

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில்இ அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில்இ அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம்   அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகக் கடமையேற்றுள்ள அனுபமா மங்கள விக்ரமாராச்சியை, சிலோன் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் இன்று (25) நேரில் சந்தித்துக் கௌரவித்ததுடன் இக்கோரிக்கையையும் முன்வைத்தனர்.

ஏனைய மாவட்டங்களில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று, அம்பாறை மாவட்டத்திலும் அரச காணி ஒன்றில் மாதிரி வீட்டுத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரச அதிபர், எதிர்வரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இது குறித்து ஆராய்ந்து, உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.

இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சிலோன் மீடியா போரத்தினர்    ‘இன்றைய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் ஊடகவியலாளர்கள் தமது பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர். எனவேஇ தகுதியான ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத்   , தேசிய அமைப்பாளர் எம்.வை. அமீர், செயலாளர் நூருல் ஹூதா உமர், பொருளாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், உப செயலாளர் என்.எம். அப்ராஸ் மற்றும் உப தலைவர்களான எஸ். தஸ்தகீர், எம்.எம். ஜபீர், உறுப்பினர்  ஏ.எச்.எம். ஹாரீஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.