Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 14:51

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 89%
  • காற்று 8 km/h
  • கொழும்பு 25°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 26°
  • வவுனியா 25°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
தேசிய செய்திகள்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்!

Puthiya Kural AI Summary – Quick Read

சவுதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி அரசாங்கத்திடம்…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

சவுதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி அரசாங்கத்திடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றோம் என மன்னாரில் இன்று (24) மாலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சர்வ மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பு இடம்பெற்றது. 

குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் சர்வமத பேரவையின் தலைவர் சிவ சிறி தர்மகுமார குருக்கள், மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி ஏ.எஸ்.எம்.அசீம், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். 

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், 

மன்னார் சர்வமதப் பேரவை யின் சார்பாகவும், மன்னார் பிரஜைகள் குழுவின் சார்பாகவும் இந்த இடத்திலே, குறிப்பாக எங்களுக்குத் தெரியும் கடந்த இரண்டு வார காலமாக எமது இலங்கைத் திருநாட்டில் பேசுபொருளாக மாற்றப்பட்டு இருக்கின்ற சகோதரர் அனோஜன் மீது விதிக்கப்பட்டு இருக்கின்ற மரண தண்டனை சம்பந்தமாக, குறிப்பாக எமது நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

முகப்புத்தக பதிவின் காரணமாக, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய அந்த அவதூறு வார்த்தை காரணமாக, சவுதி அரசாங்கத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்தத் தண்டனை நீக்கப்பட வேண்டும், மன்னிக்கப்பட வேண்டும், அவருக்கு வாழ்வதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்த உலகத்திலே வழங்கப்பட வேண்டும் என்பதற்காக வேண்டி இந்த இடத்திலே நாங்கள் ஒன்று கூடியிருக்கிறோம். 

எனவே அவர் பாவித்த அந்த வார்த்தைகள் என்பது, அது பாவிக்கப்பட்டு இருக்கக் கூடாது. உலக முஸ்லிம்களுடைய உள்ளங்களை துன்புறுத்தக் கூடிய, நோவினை படுத்த கூடிய அந்த வார்த்தையை, மனிதநேயத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் மன்னித்தாலும் கூட, இது சவுதி அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இந்தத் தண்டனை என்ற அடிப்படையில் அவருக்கு மன்னித்து மறுவாழ்வுக்கான ஒரு சந்தர்ப்பத்தை சவுதி அரசாங்கம் தான் நிச்சயமாக வழங்க வேண்டும். மன்னர் வழங்க வேண்டும். 

எனவே நாங்கள் அந்த அடிப்படையில் சகல சமயத்தவர்களும் இந்த இடத்திலே ஒன்று கூடி, அவருடைய அந்த மறுவாழ்வுக்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று சர்வமத அமைப்பின் சார்பாக இந்த இடத்திலே கௌரவமாக சவுதி அரசாங்கத்திடம் நாங்கள் விடுக்கின்றோம். 

அத்துடன் எமது நாட்டு அரசாங்கம் அவருடைய விடுதலைக்காக, தண்டனைக் குறைப்புக்காக தன்னாலான இராஜதந்திர பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அதேபோன்று இந்த நாட்டு முஸ்லிம்கள் சார்பாகவும், பள்ளிவாசல் சமூகங்கள், அதேபோன்று அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் ஊடாகவும் இப்படியான பணிகளும் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதை நாங்கள் அறிகிறோம். 

எனவே அந்த அடிப்படையில், மன்னார் மாவட்ட மக்கள் சார்பாகவும் நாங்கள் இந்த இடத்திலே மிக பணிவாக மீண்டும் ஒருமுறை சவுதி அரசாங்கத்திடம் நாங்கள் எங்களுடைய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றோம். 

அதேபோன்று எங்களுடைய நாட்டு அரசாங்கத்தினுடைய அந்த முயற்சிக்கும் ஒத்துழைப்பை வழங்குகின்றோம்.மீண்டும் அவர் அந்த மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னிக்கப்பட்டு வந்து சமய சகவாழ்வுக்கான தன்னுடைய பங்களிப்பை வழங்குவதற்கான மனமாற்றத்தை இறைவன் அவருக்கு வழங்க வேண்டும். 

எனவே அவருக்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று இந்த இடத்திலே கேட்டு, அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்