Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 14:51

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 89%
  • காற்று 8 km/h
  • கொழும்பு 25°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 26°
  • வவுனியா 25°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
கிழக்கு செய்திகள்

சம்மாந்துறை பிரதேச செயலகம் அம்பாரை மாவட்டத்தில் முதலிடம்..ஜனாதிபதி நிதிய ஊடாக சாதனைப் படைப்பு

Puthiya Kural AI Summary – Quick Read

​சர்ஜுன் லாபீர்​மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பிரதேச மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின்…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

​சர்ஜுன் லாபீர்
​
மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பிரதேச மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகம் திறம்படச் செயல்பட்டு அம்பாறை மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்திலும் முதலாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
​
கடந்த 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சேவைகளின் ஊடாக, மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத உதவிகளைப் பொதுமக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுப்பதில் சம்மாந்துறை பிரதேச செயலகம் முன்னின்று செயற்பட்டுள்ளது.
​
இது தொடர்பாக, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகச் சிறப்பாகச் சேவையாற்றிய பிரதேச செயலகங்களைப் பாராட்டி கௌரவிக்கும் கிழக்கு மாகாணக் கௌரவிப்பு நிகழ்வு, மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) ராஜதுரை கேட்போர் கூடத்தில் இன்று (12.09.2026) நடைபெற்றது.
​
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், கிழக்கு மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
​
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சார்பில் பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் வி. வாசித் அஹமட், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. எம். எம். சாபீர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி எம். ரிபாஸ் ஆகியோர் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
​
சம்மாந்துறை பிரதேச செயலகம் ஜனாதிபதி நிதியத்தின் கீழ் இதுவரை 27 மருத்துவ உதவிகளையும், 20 மருத்துவம் அல்லாத உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
​
சம்மாந்துறை பிரதேச செயலாளரின் அர்ப்பணிப்பான வழிகாட்டலும், உரிய உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியும் பொதுமக்களின் விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து இம்மாபெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக அமைந்தன.
​
இத்தகைய மக்கள் நலப் பணிகள் எதிர்காலத்திலும் தொடரவும், சம்மாந்துறை பிரதேச மக்கள் இதன் பலன்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ளவும் இந்தச் சாதனை ஒரு மைல்கல்லாக அமைகிறது.