Sunday, 29 November 2026
டொராண்டோ 5°C · பெரும்பாலும் தெளிவு
விளம்பரம்விளம்பரம்
அண்மைச் செய்திகள்
வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்: தற்காப்புக்காக எதிர்த்து போராட கூடுதல் சட்டப் பாதுகாப்பு வேண்டுமா? தென் கொரிய விபத்தில் பலியான இரு இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின! இலங்கைத் தூதரகம் பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மயிலிட்டி மக்களின் காணி மீட்புப் போராட்டம்! வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 43 பாதாள உலகக் குழுவினர் குறித்த தகவல்கள் அம்பலம்! – அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார் – வெளிவிவகார அமைச்சு கனடாவின் குடியேற்ற கொள்கை: கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்ப்பு 500-க்கும் மேற்பட்ட லிடில் (Lidl) கடைகளில் விற்கப்பட்ட உருளைக்கிழங்குகள் திரும்பப்பெறப்படுகிறது! முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்! டிசம்பர் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் மசார் படில் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த கனடா அரசு! கனடாவில் அவசரநிலையா? 72 மணி நேரத்திற்கு தண்ணீர், உணவு சேமிக்க அரசு அறிவுறுத்துவது ஏன்?

தென் கொரிய விபத்தில் பலியான இரு இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின! இலங்கைத் தூதரகம்

Puthiya Kural AI Summary – Quick Read

தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரண்டு இலங்கையர்களின் அடையாளங்களை சியோல் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரண்டு இலங்கையர்களின் அடையாளங்களை சியோல் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.


இது தொடர்பில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் சடலங்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ரன்வல, கொடகவெல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய தெஹிபிட்டிய விதானலாகே அனில் குமார விஜேரத்ன மற்றும் வலப்பனை – ஹல்கரனோயா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மகேஸ்வரன் பிரசாந்தன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து மற்றும் மரணங்கள் தொடர்பாக ‘ஹ்வாசியோங் சியோபு’ (Hwaseong Seobu) பொலிஸ் நிலையத்தினால் சியோலிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு நேற்று (27) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வாகன விபத்து நேற்று முன்தினம் (26) இரவு ஜங்கான்-மியோன் (Jangan-myeon) பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.