Tuesday, 24 November 2026
டொராண்டோ 3°C · பகுதி மேகமூட்டம்
விளம்பரம்விளம்பரம்
அண்மைச் செய்திகள்
500-க்கும் மேற்பட்ட லிடில் (Lidl) கடைகளில் விற்கப்பட்ட உருளைக்கிழங்குகள் திரும்பப்பெறப்படுகிறது! முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்! டிசம்பர் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் மசார் படில் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த கனடா அரசு! கனடாவில் அவசரநிலையா? 72 மணி நேரத்திற்கு தண்ணீர், உணவு சேமிக்க அரசு அறிவுறுத்துவது ஏன்? கிட்டுப் பூங்காவில் தொல். திருமாவளவன் பங்கேற்புடன் ஆரம்பமான ‘கார்த்திகை வாசம்’ மலர் கண்காட்சி! மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்! விடை தெரியாமல் தவிக்கும் பெற்றோர்! தேவகுமாரன் கவலை மூடநம்பிக்கை, சாதிய அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்! இந்தோனேசியாவிலுள்ள இலங்கை அகதிகள் உருக்கமான கோரிக்கை! அரசியலில் குதிக்கிறாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ்? தீவிரமாகும் களப்பணி ஆபாசக் குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் மீது பிணையில் வர முடியாத வழக்கு!

முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்! டிசம்பர் செயற்பாடுகளை ஆரம்பிக்கும்

Puthiya Kural AI Summary – Quick Read

தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது.

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது.


4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விசேட உள்ளக நிகழ்வு வளாகம், டிசம்பர் மாத இறுதிக்குள் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எவ்வாறாயினும், இது முழுமையாகச் செயற்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் மேலும் சில சிவில் கட்டுமானப் பணிகள் நிறைவடையவுள்ளன.

மாநாடுகள், கண்காட்சிகள், வர்த்தக சந்திப்புகள் மற்றும் பாரியளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்கு இந்த வளாகம் பயன்படுத்தப்படவுள்ளதாக ‘சீ.எச்.ஈ.சி. போர்ட் சிட்டி கொழும்பு’ (CHEC Port City Colombo) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், காணி அபிவிருத்தி மற்றும் விற்பனைப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளருமான சலக்க விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


துபாய் உள்ளிட்ட சர்வதேச நகரங்களிலுள்ள இவ்வாறான வசதிகளை முன்மாதிரியாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கொழும்பு துறைமுக நகரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிரந்தர மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் உருவாக்கப்படும் வரை, இந்த ‘எயார் டோம்’ வளாகம் இடைக்கால வசதியாகப் பயன்படுத்தப்படவுள்ளது.


திட்டமிடப்பட்டுள்ள நிரந்தர மையத்தில் 4,000 பேர் பங்கேற்கக்கூடிய உள்ளகப் பலநோக்கு மண்டபம் ஒன்றும், வெளிப்புறத்தில் 5,000 பேருக்கு வசதிகள் செய்துகொடுக்கக்கூடிய வளாகமும் உள்ளடக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த மையத்துக்கு அண்மையில் 400 முதல் 450 வரையிலான அறைகளைக் கொண்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் கொழும்பு துறைமுக நகரின் பிரதான திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எயார் டோம் (Air Dome) என்பது தூண்கள் அல்லது சுவர்கள் இன்றி, தொடர்ச்சியாகச் செலுத்தப்படும் காற்றின் அழுத்தத்தால் தாங்கிப் பிடிக்கப்படும் ஒரு பிரம்மாண்டமான, பலமான துணியாலான கட்டமைப்பாகும். இதை மிக விரைவாகவும் குறைந்த செலவிலும் அமைக்க முடியும் என்பதால், நிரந்தரக் கட்டடங்கள் உருவாகும் வரை மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் பெரிய நிகழ்வுகளை நடத்த இடைக்கால வசதியாகப் பயன்படுத்துகின்றனர்.