Wednesday, 25 November 2026
டொராண்டோ 4°C · மேகமூட்டம்
விளம்பரம்விளம்பரம்
அண்மைச் செய்திகள்
கனடாவின் குடியேற்ற கொள்கை: கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்ப்பு 500-க்கும் மேற்பட்ட லிடில் (Lidl) கடைகளில் விற்கப்பட்ட உருளைக்கிழங்குகள் திரும்பப்பெறப்படுகிறது! முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்! டிசம்பர் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் மசார் படில் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த கனடா அரசு! கனடாவில் அவசரநிலையா? 72 மணி நேரத்திற்கு தண்ணீர், உணவு சேமிக்க அரசு அறிவுறுத்துவது ஏன்? கிட்டுப் பூங்காவில் தொல். திருமாவளவன் பங்கேற்புடன் ஆரம்பமான ‘கார்த்திகை வாசம்’ மலர் கண்காட்சி! மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்! விடை தெரியாமல் தவிக்கும் பெற்றோர்! தேவகுமாரன் கவலை மூடநம்பிக்கை, சாதிய அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்! இந்தோனேசியாவிலுள்ள இலங்கை அகதிகள் உருக்கமான கோரிக்கை! அரசியலில் குதிக்கிறாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ்? தீவிரமாகும் களப்பணி

ஆபாசக் குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் மீது பிணையில் வர முடியாத வழக்கு!

Puthiya Kural AI Summary – Quick Read

சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. ஆபாசக் குறுஞ்செய்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்.எல்.ஏ.

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மேலும் 3 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; பிணையில் வெளிவர முடியாத பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷிடம் குற்றப்பிரிவுப் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆபாசக் குறுஞ்செய்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படியான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் தனக்குத் தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாக மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டினார்.

வழக்குப் பதிவு மேலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தது உறுதி செய்யப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தவெக எம்.எல்.ஏ.விடம் விசாரணை மேலும், இந்த வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும், மாவட்ட ஆட்சியர் வழக்கில் யாரையும் பாதுகாக்க முயற்சிக்கக் கூடாது; அவ்வாறு செய்தால் தர்ம சங்கடத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார். மாவட்ட ஆட்சியர் புகார் விசாரணையை ஐ.ஜி. பிரவீன் குமார் அபிநபு கண்காணிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் புகாரை விசாரிக்கும் பணியிடக் குழுவை (ICC) வெள்ளிக்கிழமைக்குள் (27) அமைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷிடம் குற்றப்பிரிவுப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் உள்ள எம்.எல்.ஏ. விக்னேஷின் வீட்டில் வைத்து, உளுந்தூர்பேட்டை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் யோகேஸ்வரன் மற்றும் கள்ளக்குறிச்சி உளவுப் பிரிவுப் பொலிஸார் ஒருவர் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிணையில் வர முடியாத பிரிவு மேலும், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் கைப்பேசியைப் பறிமுதல் செய்து, சைபர் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப் பொலிஸார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மேலும் 3 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; பிணையில் வெளிவர முடியாத பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS 75, 78, 79 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சிப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், ‘BNS 75’ என்பது பிணையில் வெளிவர முடியாத பிரிவாகும்; இது பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகப் பாலியல் ரீதியில் அணுகுதல் பிரிவில் பதியப்பட்ட வழக்காகும். ‘BNS 78’ என்பது பெண்களின் விருப்பம் இல்லாமல் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்யும் பிரிவிலும், ‘BNS 79’ என்பது ஆபாசச் செய்கை செய்தல் எனும் பிரிவிலும் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.