Tuesday, 24 November 2026
டொராண்டோ 3°C · பகுதி மேகமூட்டம்
விளம்பரம்விளம்பரம்
அண்மைச் செய்திகள்
500-க்கும் மேற்பட்ட லிடில் (Lidl) கடைகளில் விற்கப்பட்ட உருளைக்கிழங்குகள் திரும்பப்பெறப்படுகிறது! முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்! டிசம்பர் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் மசார் படில் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த கனடா அரசு! கனடாவில் அவசரநிலையா? 72 மணி நேரத்திற்கு தண்ணீர், உணவு சேமிக்க அரசு அறிவுறுத்துவது ஏன்? கிட்டுப் பூங்காவில் தொல். திருமாவளவன் பங்கேற்புடன் ஆரம்பமான ‘கார்த்திகை வாசம்’ மலர் கண்காட்சி! மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்! விடை தெரியாமல் தவிக்கும் பெற்றோர்! தேவகுமாரன் கவலை மூடநம்பிக்கை, சாதிய அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்! இந்தோனேசியாவிலுள்ள இலங்கை அகதிகள் உருக்கமான கோரிக்கை! அரசியலில் குதிக்கிறாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ்? தீவிரமாகும் களப்பணி ஆபாசக் குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் மீது பிணையில் வர முடியாத வழக்கு!

கிட்டுப் பூங்காவில் தொல். திருமாவளவன் பங்கேற்புடன் ஆரம்பமான ‘கார்த்திகை வாசம்’ மலர் கண்காட்சி!

Puthiya Kural AI Summary – Quick Read

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் 'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி (21)மாலை நல்லூர்…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் ‘கார்த்திகை வாசம்’ மலர் கண்காட்சி (21)மாலை நல்லூர் கிட்டுப் பூங்காவில் ஆரம்பமானது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் கா.சோ. சிவநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கன் பிரதம விருந்தினராகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்றியதுடன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரையாற்றினார்.

இதேவேளை, முனைவர் தொல். திருமாவளவன் மற்றும் இந்திய வணிகர்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஆர்.ஆர். தமிழ்ச்செல்வன் ஆகியோரின் பங்களிப்பில் நூறு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன