Saturday, 7 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் 1 CAD =
  • LKR 236.64 ▼ 0.46%
  • INR 66.75 ▼ 1.42%
  • USD 0.7092 ▼ 49.32%
  • EUR 0.6356 ▼ 59.43%
  • GBP 0.5304 ▼ 71.75%
  • AED 2.6046 ▲ 583.51%
  • CHF 0.5814 ▼ 65.94%
  • SAR 2.6596 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-07 18:01

கனடாவிலிருந்து உலகத்தமிழர்களுக்காக வெளிவரும் பத்திரிகை

கனடா வானிலை
9°C
டொரன்டோ
மேகமூட்டம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 80%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ 8°
  • மார்க்கம் 9°
  • பிராம்ப்டன் 9°
  • மிசிசாகா 9°
அண்மைச் செய்திகள்
கனடாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த  ரூ.142 பில்லியன் திட்டம் விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி
மலையக செய்திகள்

நெல்லிமலையில் தற்காலிகப் பாலம் வெள்ளத்தில் அள்ளுண்டது

Puthiya Kural AI Summary – Quick Read

கண்டி, பன்விலை, நெல்லிமலை பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 12) பிற்பகல் முதல் மாலை மற்றும் இரவு வேளைகளில் பெய்த கடும் மழை காரணமாக, அப்பிரதேசத்தில்…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

கண்டி, பன்விலை, நெல்லிமலை பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 12) பிற்பகல் முதல் மாலை மற்றும் இரவு வேளைகளில் பெய்த கடும் மழை காரணமாக, அப்பிரதேசத்தில் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டிருந்த பாலம் முற்றாக நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் பாடசாலை வருகையும் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தித்வா புயலினால் நெல்லிமலை பிரதேசத்தில் அமைந்திருந்த சுமார் நூறு வருடங்கள் பழமையான இரும்புப் பாலம் முன்னதாக வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரதேச மக்களும் தோட்ட நிர்வாகமும் இணைந்து தற்காலிகமாகப் பாலத்தைப் புனரமைத்திருந்தனர். எனினும், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்ட இந்தப் பாலம் தொடர்ந்து பெய்த கடும் மழையினால் அவ்வப்போது பல்வேறு சேதங்களுக்கு உள்ளாகி வந்தது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 12) பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, பாலம் முற்றாக நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நெல்லிமலை அரசப் பெருந்தோட்டம் மற்றும் சோலங்கந்தை உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து நெல்லிமலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலயத்திற்குக் கல்வி கற்க வரும் மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், நெல்லிமலை தனியார் தோட்டத்திற்குச் செல்லும் மற்றுமொரு பாலமும் சேதமடைந்துள்ளதால், அப்பிரதேசத்திற்கான போக்குவரத்தும் அபாயகரமான நிலையை எதிர்கொண்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பாலங்களை விரைவாகப் புனரமைத்து, பிரதேச மக்களினதும் மாணவர்களினதும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.