Thursday, 19 November 2026
டொராண்டோ 8°C · பெரும்பாலும் தெளிவு
விளம்பரம்விளம்பரம்
அண்மைச் செய்திகள்
“அன்புள்ள தந்தையே, உங்களது பிறந்தநாளில் இன்று உங்களது அருகில் இருந்து வாழ்த்த இயலாமல்.. விதி! நாமலின் போஸ்ட் இஸ்லாத்திற்கு அவதூறு விளைவித்த ஞானசார – 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது கனடா புதிய வர்த்தக இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது! நாளை வீதிகளில் இறங்கும் தொடருந்து ஊழியர்கள்! முடங்கும் போக்குவரத்து! தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் காலமானார் லிபரல் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் லியின் தேர்தல் பிரசாரம் பெருந்திரளான ஆதரவாளர்களுடன் ஆரம்பம்! யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம் கனடாவின் புதிய வரவு செலவுத் திட்டம் : பொருளாதாரத்தை வலுப்படுத்த 142.1 பில்லியன் டொலர் ஒதுக்கீடு Exclusive – பொலிஸ் கொலைகள் தொடர்பில் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு சட்டங்கள்? தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மோடிக்கு அறிவிக்க இந்திய நிதியமைச்சர் உறுதியளிப்பு

இஸ்லாத்திற்கு அவதூறு விளைவித்த ஞானசார – 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது

Puthiya Kural AI Summary – Quick Read

இஸ்லாத்திற்கு அவதூறு விளைவித்த  ஞானசாரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

இஸ்லாத்திற்கு அவதூறு விளைவித்த  ஞானசாரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரரால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்தே நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 2016 மார்ச் 30 ஆம் திகதி கொழும்பு – கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இஸ்லாம் மதத்திற்கு அவதூறு சேர்த்ததுடன் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் கடந்த 2024 ஆம் ஆண்டில் 4 வருட பாரிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனைக்கு எதிராகவே ஞானசார தேரரால் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது