Wednesday, 18 November 2026
டொராண்டோ 14°C · தெளிவான வானம்
விளம்பரம்விளம்பரம்
அண்மைச் செய்திகள்
கனடா புதிய வர்த்தக இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது! நாளை வீதிகளில் இறங்கும் தொடருந்து ஊழியர்கள்! முடங்கும் போக்குவரத்து! தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் காலமானார் லிபரல் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் லியின் தேர்தல் பிரசாரம் பெருந்திரளான ஆதரவாளர்களுடன் ஆரம்பம்! யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம் கனடாவின் புதிய வரவு செலவுத் திட்டம் : பொருளாதாரத்தை வலுப்படுத்த 142.1 பில்லியன் டொலர் ஒதுக்கீடு Exclusive – பொலிஸ் கொலைகள் தொடர்பில் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு சட்டங்கள்? தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மோடிக்கு அறிவிக்க இந்திய நிதியமைச்சர் உறுதியளிப்பு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் ரூ. 30,000 அபராதம் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை: இராணுவப் பயிற்சிப் பகுதிக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதால் மேலும் சிக்கல்!

கனடா புதிய வர்த்தக இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது!

Puthiya Kural AI Summary – Quick Read

சீனாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கனடா புதிய வர்த்தக இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது.

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

சீனாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கனடா புதிய வர்த்தக இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது.

இதற்கமைய, கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உறைந்த பன்றி இறைச்சி மற்றும் கடலுணவுப் பொருட்கள் மீதான மேலதிக 25 சதவீத வரியை நீக்குவதற்கு சீனா இணங்கியுள்ளது.

இந்த வரிச்சலுகையின் மூலம் சுமார் 400 மில்லியன் கனேடிய டொலர் பெறுமதியான ஏற்றுமதிகளுக்கு சீனச் சந்தையில் மீண்டும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.

இதற்குப் பதிலாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான வரி விலக்குத் திட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க கனடா இணங்கியுள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையில் நவம்பர் 17ஆம் திகதி சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளில் நிலைத்தன்மையையும் எதிர்காலத் திட்டமிடலுக்கான உறுதிப்பாட்டையும் ஏற்படுத்த முடியும் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், கனடா மற்றும் சீனாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 125 பில்லியன் கனேடிய டொலர்களை எட்டியுள்ளதாகவும் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கச் சந்தையை மட்டுமே பெரிதும் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, சர்வதேச ரீதியில் தனது ஏற்றுமதிச் சந்தைகளை விரிவுபடுத்தும் கனடாவின் பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.