Sunday, 16 August 2026
BREAKING NEWS
டொரண்டோ செய்திகள்

LAKE ONTARIO வில் படகு கவிழ்ந்து 9 பேர் மீட்பு! Peel Regional Police அறிவிப்பு

மிசிசாகாவில் உள்ள Port Credit Harbour Marina அருகே Lake Ontario ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் இருந்த 9 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை மாலை 5 மணிக்குப் பின்னர் படகு ஆபத்தில் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து Peel Regional Police-இன் கடல் மீட்புப் பிரிவு சம்பவ இடத்துக்கு விரைந்தது.

Ridgetown breakwall பகுதிக்கு சுமார் 50 மீற்றர் தெற்கே கவிழ்ந்த நிலையில் இருந்த படகை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் இருந்த 9 பேரும் படகைப் பற்றிக்கொண்டு உயிரைக் காத்துக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மீண்டும் marina பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் சிலருக்கு ஏற்பட்ட சிறிய சிராய்ப்புகளைத் தவிர, வேறு காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.

பொலிஸார் வருவதற்கு முன்பாக தனிப்பட்ட நீர்வாகனத்தில் (personal watercraft) சென்ற ஒருவர், தன்னால் முடிந்த உதவியை வழங்கி ஒருவரை மீட்க உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது பலத்த காற்றுடன் 2 முதல் 3 மீற்றர் உயரம் வரை அலைகள் காணப்பட்டதால் மீட்புப் பணி மிகவும் சவாலானதாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் அந்தப் படகு Credit River-ன் மேற்குப் பகுதியில் உள்ள பாறைகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், மோசமான வானிலை மற்றும் நீரின் அபாயகரமான நிலை காரணமாக படகை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

படகு கடைசியாக காணப்பட்ட இடம் தொடர்பாக Canadian Coast Guard-க்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக Peel Regional Police தெரிவித்துள்ளது. மூலம்: CityNews Toronto

பகிர்: