Monday, 10 August 2026
BREAKING NEWS
டிரெண்டிங் @ புதிய குரல்

இருக்கைக்கு மேல் வைக்கப்படும் பைகளுக்குக் கட்டணம்

விமானங்களில் பயணிகள் இருக்கைக்கு மேல் வைக்கப்படும் பொருட்களுக்கு விரைவில் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது என ஜெட்ஸ்டார் (Jetstar) அறிவித்துள்ளது. .

2027 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வரும். பயணிகள் இருக்கைக்குக் கீழ் ஒரு பையைக் கூடுதல் செலவின்றி வைத்துக்கொள்ளலாம். ஆனால் பெரிய பைகளுக்கு 16 டொலர் முதல் 52 டொலர் வரை பணம் செலுத்த வேண்டியிருக்கும். விமானப் பயணம் அடிப்படையான கட்டணங்களிலேயே வசூலிக்கப்படும்.

உலக அளவில் செயல்படும் பல்வேறு மலிவுக் கட்டண விமான நிறுவனங்கள் ஏற்கனவே இத்தகைய நடைமுறையைப் பின்பற்றுகின்றன. மலிவுக் கட்டண விமான நிறுவனங்களின் வருவாயில் பெட்டிகளுக்கான கட்டணம் மற்றும் இருக்கை தேர்வுக்கான கட்டணம் ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன.

புதிய நடைமுறையானது விமானம் திட்டமிட்ட நேரத்தில் புறப்பட உதவும் என்று ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபனி டுல்லி (Stephanie Tully) தெரிவித்தார்.

பகிர்: