Monday, 10 August 2026
BREAKING NEWS
கனடா செய்திகள்

காட்டுத்தீ காரணமாக British Colombia மாகாணத்தில் அவசர நிலை

காட்டுத்தீ காரணமாக British Colombia மாகாணம் அவசர நிலையை அறிவித்தது.

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக British Colombia மாகாண அரசாங்கம் அவசர நிலையை அறிவித்துள்ளது.

சனிக்கிழமை (08) மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நிலைமை மோசமடைந்து வருவதாக முதல்வர் David Eby கூறினார்.

இந்த நிலையில் காட்டுத்தீயினால் வெளியேற்றப்பட்டவர்களுக்கும் காட்டுத்தீயை எதிர்த்துப் போராடுபவர்களுக்கும் தனது ஆதரவை கனடியப் பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும், ஆபத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் உதவ மத்திய அரசு தயாராக இருக்கும் எனவும் அவர் கூறினார்

பகிர்: