Monday, 10 August 2026
BREAKING NEWS
கனடா செய்திகள்

FIFA தலைவர் மீது நம்பிக்கை இல்லை: Mark Carney விமர்சனம்?

FIFA தலைவரின் தலைமையை கனடிய பிரதமர் Mark Carney விமர்சித்தார்.

FIFA-வை நிர்வகிக்கும் Gianni Infantinoவின் திறமை மீது தனக்கு இனி நம்பிக்கை இல்லை என Mark Carney தெரிவித்தார்.

2026 FIFA உலகக் கோப்பை நிறைவடைந்து சில வாரங்களே ஆன நிலையில், FIFA தலைவராக Gianni Infantino-வின் தலைமையை பிரதமர் விமர்சித்தார்

FIFA தலைவர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என Mark Carney கூறினார் .

FIFA வணிக ரீதியான உரிமைகளின் ஒரு பகுதியைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான திட்டங்களை Gianni Infantino முன்மொழிந்த நிலையில் கனடிய பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது.

அத்தகைய முடிவுகளை எடுக்கும் நடைமுறைகள் FIFA-விடம் உள்ளது எனக் கூறிய அவர், நடந்த நிகழ்வுகள், அவற்றின் தன்மையை கருத்தில் கொள்ளும்போது, ​​இனி Gianni Infantino மீது தனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என புதன்கிழமை (05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Mark Carney கூறினார்.

பகிர்: