Tuesday, 17 November 2026
டொராண்டோ 12°C · தெளிவான வானம்
விளம்பரம்விளம்பரம்
அண்மைச் செய்திகள்
நாளை வீதிகளில் இறங்கும் தொடருந்து ஊழியர்கள்! முடங்கும் போக்குவரத்து! தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் காலமானார் லிபரல் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் லியின் தேர்தல் பிரசாரம் பெருந்திரளான ஆதரவாளர்களுடன் ஆரம்பம்! யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம் கனடாவின் புதிய வரவு செலவுத் திட்டம் : பொருளாதாரத்தை வலுப்படுத்த 142.1 பில்லியன் டொலர் ஒதுக்கீடு Exclusive – பொலிஸ் கொலைகள் தொடர்பில் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு சட்டங்கள்? தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மோடிக்கு அறிவிக்க இந்திய நிதியமைச்சர் உறுதியளிப்பு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் ரூ. 30,000 அபராதம் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை: இராணுவப் பயிற்சிப் பகுதிக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதால் மேலும் சிக்கல்! அனைத்துலகத் தமிழர் பேரவை அமைப்பை அரசியல் கலப்பற்ற ஒரு ஜனநாயகக் கட்டமைப்பாக உருவாக்குவதே எமது நோக்கம்

தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் காலமானார்

Puthiya Kural AI Summary – Quick Read

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (வயது 69)…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (வயது 69) நேற்று சனிக்கிழமை நள்ளிரவு காலமானார்.

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்திருந்த அவர், அண்மைக்காலமாக உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு 11.50 மணியளவில் தனது வல்வெட்டித்துறை இல்லத்தில் உயிரிழந்தார்.

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் களத்தில் நீண்டகால அனுபவம் கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதியான எம்.கே.சிவாஜிலிங்கம், இராணுவம், பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கிய ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு இலக்காகியும் எதற்கும் அஞ்சாது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களிலும் அரசியல் செயற்பாடுகளிலும் தீவிரமாகப் பங்காற்றியவர் ஆவார்.

2009ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அரச புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் நிகழ்வுகளைத் துணிவுடன் முன்னின்று நடத்தி வந்த பெருமை இவரையே சாரும்.

ரெலோ அமைப்பின் மூத்த உறுப்பினராக இருந்த இவர், 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றினார்.

பின்னர் ரெலோ கட்சியிலிருந்து விலகித் தமிழ்த் தேசியக் கட்சியில் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த அவர், இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, தவிசாளராகப் பொறுப்பு வகித்து நகர அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பணிகளை முன்னெடுத்து வந்தார்.