Saturday, 21 November 2026
டொராண்டோ 9°C · பெரும்பாலும் தெளிவு
விளம்பரம்விளம்பரம்
அண்மைச் செய்திகள்
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்… முதலமைச்சர் விஜய்க்கு ஜவாஹிருல்லா எழுதிய கடிதம்! தாதாசாகேப் பால்கே விருது! இளையராஜா, கமல்ஹாசன், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோருக்கு கௌரவம்! அனிருத் – காவ்யா தம்பதிக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி என்ன சொல்லிருக்காங்க தெரியுமா ? வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் – முதல்வர் விஜய் தோள்கொடுத்து உடலைச் சுமந்தார்! 2012ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வருகிறது! கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாய் 5 நாட்களாகக் காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக் கொடுப்பனவு இம்முறை வரவு–செலவுத் திட்டத்தில் ‘வெட்டிக் குறைக்கப்பட்டது’ மாவீரர் வாரத்தின் முதல் நாள்; கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் – ரவிகரன் எம்.பி ஒன்ராறியோ லிபரல் கட்சியின் தலைமைப் போட்டி: நான்கு வேட்பாளர்கள் யார்? மனிதநேயத்தின் குரலை உலகிற்கு எடுத்துச் சென்ற இலக்கிய ஆளுமை

கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாய் 5 நாட்களாகக் காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Puthiya Kural AI Summary – Quick Read

கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் - நெல்லியடிப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம்தகவல் அறிந்தோர் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் உருக்கமான…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் – நெல்லியடிப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம்
தகவல் அறிந்தோர் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள்

அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கடந்த 5 நாட்களாகக் காணாமல் போயுள்ளதாகக் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் அவரது கணவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் தொடர்பான விவரங்கள் வருமாறு:

காணாமல் போனவரின் விபரம்:

பெயர்: சுப்ரமணியம் கற்பகக்கரசு

முகவரி: இல. 29/2, கடற்கரை வீதி, கல்முனை – 2A

குடும்ப விபரம்: மூன்று பிள்ளைகளின் தாய் (14 வயதுடைய ஒரு பெண் பிள்ளை, 10 வயதுடைய ஆண் பிள்ளை மற்றும் 6 வயதுடைய ஆண் பிள்ளை).

கல்முனையிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய இவர், இதுவரை வீடு திரும்பாத நிலையில் யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கணவரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கல்முனை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூன்று சிறு பிள்ளைகளின் தாயான இவரைப் பற்றிய ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாகக் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவித்து உதவுமாறு குடும்பத்தினர் பொதுமக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்பு இலக்கங்கள்: 071 419 6223 / 074 278 1199