மறைந்த கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலம் இன்று தொடங்கியது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், முதல் ஆளாகத் தோள்கொடுத்து உடலைச் சுமந்து சென்ற சம்பவம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வி.எஸ். பாபுவின் உடல், இறுதிச் சடங்குகளுக்காக மயானத்துக்கு எடுத்துச் செல்லும் வாகனத்தில் வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த முதல்வர் விஜய், வி.எஸ். பாபுவின் உடலைத் தனது தோளில் சுமந்து சென்று வாகனத்தில் வைத்தார்.
72 நாள்கள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழப்பு
சென்னை கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டப்பேரவை உறுப்பினரான வி.எஸ். பாபு (75), கடந்த 72 நாள்களாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 19ஆம் திகதி திடீரென ஏற்பட்ட இதயச் செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார்.
கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி சுவாசப் பிரச்சினை காரணமாக சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல்நிலை குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் நீண்ட நாள்களாக வெளியாகவில்லை.
இந்நிலையில், நவம்பர் 19ஆம் திகதி பிற்பகல் 2.24 மணியளவில் திடீரென ஏற்பட்ட இதயச் செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி
வி.எஸ். பாபுவின் மறைவுச் செய்தியறிந்த முதல்வர் விஜய், நேற்று மாலை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது மகன் சதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இறுதிச் சடங்கிலும் முதல்வர் விஜய் பங்கேற்று, மறைந்த சட்டப்பேரவை உறுப்பினரின் உடலைத் தோளில் சுமந்து தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார்.




