“ஆகுதி வார்க்கும் யாகம்” கவனஈர்ப்புப் போராட்டம், மற்றும் எழுச்சி நிகழ்வு

கனடிய மண்ணில் இன்று “ஆகுதி வார்க்கும் யாகம்” கவனஈர்ப்புப் போராட்டம், மற்றும் எழுச்சி நிகழ்வு பிரம்டனில் சிங்கூசி பூங்காவில் அமைந்துள்ள தமிழின அழிப்பு நினைவக முன்றலில் உணர்வுபூர்வமாக கனடியத் தமிழர் சமூகம் மாணலர் சமூகத்தினால் பெருமளவு மக்கள் வருகையோடு எழுச்சியாக நடைபெற்றது!
தாயகத்தில் ஆகஸ்ட் 30ம் நாளாக விடிந்திருக்கும் இவ்வேளையில் அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் “ நீதிக்கான நீள் பயணம்” மாநாடு நடைபெறவுள்ளது!
இந்நாளில் போராடும் எம் தாயக உறவுகளின் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் வண்ணமும்,
செம்மணியில் சிங்களப் பேரரசினால் கொடூரமாகக் கொன்று புதைக்கப்பட்ட எம் உறவுகளிற்கு நீதி வேண்டியும்,
செம்மணிப் படுகொலை உள்ளிட்ட அனைத்து தமிழினப் இனப்படுகொலைகளிற்கும் அனைத்துலக விசாரணையூடாக நீதி வேண்டியும்
இப் போராட்டம் கனடியத் தமிழர்களால் நடத்தப்பட்டது.
