Sunday, 8 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்

அண்மைச் செய்திகள்
மனநலச் சமத்துவத்தை மேம்படுத்தும் அரிய திட்டப் பணியில் இணைந்துள்ள யாழ் மருத்துவ பீடம் கனடாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த  ரூ.142 பில்லியன் திட்டம் விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி!
கனடா செய்திகள்

மனநலச் சமத்துவத்தை மேம்படுத்தும் அரிய திட்டப் பணியில் இணைந்துள்ள யாழ் மருத்துவ பீடம்

Puthiya Kural AI Summary – Quick Read

கனடியத் தமிழ்ச் சமூக மட்டத்தில் மனநலச் சமத்துவத்தை மேம்படுத்தும் என்னும் அரிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கடந்த சில மாதங்களாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்த…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

கனடியத் தமிழ்ச் சமூக மட்டத்தில் மனநலச் சமத்துவத்தை மேம்படுத்தும் என்னும் அரிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கடந்த சில மாதங்களாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்த ‘கனடா- யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்ற மருத்துவர்களின் சங்க’த்தைச் சேர்ந்த பல மருத்துவர்கள் ஒன்றிணைந்து நடத்திய பயனுள்ள ஊடகக் கருத்தரங்கு கடந்த 31-10-2026 அன்று சனிக்கிழமை ஸ்காபுறோவில் அமைந்துள்ள சென்றனரி பொது வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி திட்டமானது SCARBOROUGH HEALTH NETWORK வைத்திய அமைப்புடன் இணைந்து மெற்கொள்ளப்படவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அரிய திட்டத்தில் இணைந்துள்ள யாழ் மருத்துவ பீடம் தந்த பல வைத்தியப் பெருந்தகைள் சார்பாக அன்றையதினம் கருத்தரங்கை வைத்தியர் மைலாசன் மயில்வாகனம் தொகுத்து வழங்க வைத்தியர் இலம்போதரன் இராமநாதன். வைத்தியர் தமிழ்வாணன் பரமநாதன். வைத்தியர் ஸ்ரீ நவரட்ணம். இளஞ்செழியன் அம்பலவாணர், வைத்தியர் செந்தூரன் குணரட்ணம் ஆகியோர் தமிழ் ஊடக நிறுவனங்களின ஊடகவியலாளர்களுக்கு திட்டம் பற்றி விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து SCARBOROUGH HEALTH NETWORK வைத்திய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளான மத்திய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி. ஒன்றாரியோ மாகாணத்தின் இணையமைச்சர்களில் ஒருவரான மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜேய் தணிகாசலம் உட்பட சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் சேவையாளர்கள், வர்த்தகப் பெருமக்கள் என மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மேற்படி பயனுள்ள திட்டம் தொடர்பான பலரின் விளக்கவுரைகளை கேள்வி பதில்கள் ஆகியவற்றை நன்கு கவனித்த வண்ணம் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அங்கு முக்கிய உரையாற்றிய வைத்தியர் திருமதி ஶ்ரீ நவரட்ணம் தனது உரையை உணர்வுபூர்வமாகவும் சபையோரை கவரும் வகையிலும் சான்றுகளுடன் ஆற்றினார். மனநலப் பாதிப்புற்றவர்களை நாம் ஆரம்பத்திலேயே குணப்படுத்தும் அல்லது ஆற்றுப்படுத்தும் சிகிச்சைகளை அல்லது ஆலோசனைகளை வழங்குவது முக்கியமானது என்று குறிப்பிட்டதுடன் மனநலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஒரு தம்பதியை அழைத்து வந்து அவர்களது மகன் ஒருவர் எவ்வாறு தாமதான சிகிச்சைக்கு அவர் உள்வாங்கப்பட்டதனால் எவ்வாறு அவர் உயிர் துறக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அந்தக் குடும்பம் தள்ளப்பட்டது என்பது மிகுந்து பொறுப்புணர்வு எடுத்துரைத்தார்.

அத்துடன் தமிழ் மக்கள் மத்தியில் மனநலம் குன்றும் பிரச்சனைகள் அதிகமாகக் காணப்படுவதால் எமது சமூகத்தின் அனைத்து வயதுடையவர்களும் அக்கறை எடுத்து இனிவரும் காலங்களில் எமது கனடிய தமிழ்ச் சமூகம் ‘மன நலம் குன்றும்’ நிலைக்கு எவரும் தள்ளப்படாமல் கவனிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் மனநல மருத்துவம் அல்லது ஆலோசனைகள் வழங்குதல் அல்லது தடுப்பு நடவடிக்கைகள் என்பன வைத்தியர்களாலும் வைத்திய சிசிச்சை வழங்குபவர்களால் மாத்திரம் கவனிக்கப்பட வேண்டியது என்பதை சிந்தனையில் எடுத்துக் கொள்ளாமல். இந்த மனநலப் பாதிப்புக்கு எதிராக செயற்பட வேண்டிய எமது சமூகமும் அதில் சம்பந்தப்படட அனைத்து துறை சார்ந்தவர்களும் அமைப்புக்களும் என்பதை நாம் உணரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த நன்மை பயக்கும் திட்டத்தில் தமது மருத்துவ அமைப்பான ‘கனடா- யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்ற மருத்துவர்களின் சங்க’த்தைச் சேர்ந்த மருத்துவப் பெருந்தகைகளோடு இணைந்து பணியாற்றி முன்வந்த SCARBOROUGH HEALTH NETWORK வைத்திய அமைப்பின் முக்கியஸ்த்தர்களுக்கும் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள்- தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய எமது அரசியல் பிரமுகர்கள் மூவரும் பயனுள்ளதும் உறுதியானதுமான கருத்துக்களை முன்வைத்து அங்கு சுமூகமளித்த அனைவருக்கும் SCARBOROUGH HEALTH NETWORK வைத்திய அமைப்பின் சார்பிலும் ‘கனடா- யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்ற மருத்துவர்களின் சங்க’த்தைச் சேர்ந்த மருத்துவப் பெருந்தகைகள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பெற்றது.

இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.