‘தேனிசைத் தென்றல்- Live in Concert என்னும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி

எதிர்வரும் 15-08-2026 சனிக்கிழமையன்று 8100 Steels Avenue East- Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள MARKHAM MEADOW திறந்த வெளி அரங்கில் நடைபெறவுள்ள ‘தேனிசைத் தென்றல்- Live in Concert என்னும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டு ‘கானா’ எனும் தென்றலை ரொறன்ரோ நகரில் ‘தெறிக்க’ விடுவதற்காக கனடா வந்துள்ள ‘தேனிசைத் தென்றல்’ தேவாவும் அவர் குழுவினரும் 12ம் புதன்கிழமையன்று காலை ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள்.
தனது இசைப் பட்டாளத்தில் பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் ஆகியோர் உட்பட சுமார் 25 கலைஞர்களை ‘தேனிசைத் தென்றல்’ தேவா இங்கு அழைத்து வந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவில் தேவா அவர்களின் புதல்வர் ஶ்ரீகாந்த் தேவாவும் அடங்கியுள்ளார் என்பதும் பாடகர் மனோ மற்றும் பாடகி அனுராதா ஶ்ரீராம் உட்பட பல முன்னணிப் பாடக பாடகிகள் இந்தக் குழுவில் அடங்கியுள்ளார்கள்.
இவர்களது அட்டகாசமான பாடல்களையும் பார்த்தும் கேட்டும் ரசிக்கும் சந்தர்ப்பம் நமது ரொறன்ரோ ரசிகப் பெருமக்களுக்கு கிட்டியுள்ளது.
12ம் திகதி புதன்கிழமை ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய ‘தேனிசைத் தென்றல்’ தேவாவும் அவர் குழுவினர் அனைவரும் அங்கு அவர்களை வரவேற்க வந்திருந்த விழா ஏற்பாட்டாளர்டகளில் சிலரான மயூரன் தனபாலன்- ரவி கனகசபை- மற்றும் சங்கர் உட்பட பலர் அனைவரையும் மாலைகளும் பூக்கொத்துகளும் வழங்கிக் கௌரவித்தார்கள்.
அங்கு குழுமியிருந்த பத்திரிகை ஆசிரியர் மற்றும் சமூக ஊடகங்களின் பிரதிநிதிகள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் ரசிகர்கள் அனைவரும் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவும் அவர் குழுவினரும் வந்திறங்கிய அந்த தருணத்தை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
கனடா உதயன் உட்பட பல ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பையும் தங்கள் சமூக ஊடகத் தளங்கள் ஆகியவற்றின் ஊடாக இசை ரசிகர்களுக்கு கொண்டு சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது- (YYZ Airport – Naga Logendralingam)
