மனிதாபிமான முயற்சியில் Canadian Tamil Congress (CTC), IMHO Canada அமைப்புகள் இணைந்துள்ளன!

இந்தியாவில் அண்ணளவாக 100,000 ஈழத்தமிழ் தமிழ் உறவுகள் முகாம்களிலும் வெளியிலும் பல வருடங்களாக பல சவால்கள் மத்தியில் குடியுரிமையற்று வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான துயரமான சூழ்நிலையில் நிரந்திர தீர்வுகளற்று வாழ்ந்து வரும் எமது தமிழ் உறவுகள், தங்கள் விருப்பப்படி தம் தாயகமான இலங்கைக்கு மீளக் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த தமிழ் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நாம் இந்த முயற்ச்சியை முன்னெடுக்கிறோம்.
இந்த மனிதாபிமான முயற்சியில் Canadian Tamil Congress (CTC), IMHO Canada, மற்றும் Ofeer Ceylon ஆகிய அமைப்புகள் இணைந்துள்ளன.
இந்த Walkathon என்பது வெறும் நிதி திரட்டும் நிகழ்வு மட்டுமல்ல. ஒரு சிறந்த மனிதாபிமான நோக்கத்திற்காக தமிழர்களாகிய நமது ஒற்றுமை, இரக்கம் மற்றும் “இந்தியாவில் வாழும் எமது தமிழ் உறவுகள் நீங்கள் கைவிடப்பட்டவர்கள் அல்ல; உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் உங்களுடன் இருக்கிறார்கள்” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
இந்த Walkathon மூலம் திரட்டப்படும் நிதி, இலங்கைக்குத் திரும்பும் குடும்பங்களின், தற்காலிக வீட்டு வசதி மற்றும் அவர்கள் வேலைவாய்ப்பு பெற்று, தேவையான அடிப்படை வாழ்க்கை ஆதரவை வழங்கப் பயன்படுத்தப்படும்.
இன்று, அனைத்து தமிழ் அமைப்புகள், தொழிலதிபர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடமும் எங்களின் அன்பான வேண்டுகோள்— ஒரே தமிழ் சமூகமாக, எந்தவித பாகுபாடுமின்றி இந்த மனிதாபிமான முயற்சிக்காக ஒன்றிணைவோம்.
இந்த உயரிய நோக்கத்திற்காக கைகோர்த்துள்ள இந்த மூன்று அமைப்புகளுக்கும் மீண்டும் எங்களது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவர்களுடன் சேர்ந்து நீங்களும் நாங்களும் ஒன்றிணைந்து நடப்போம். ஒன்றிணைந்து நிற்போம். ஒன்றிணைந்து பல குடும்பங்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைப்போம். ஏனெனில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், ஒரு குடும்பத்தை அவர்களின் தாயகத்திற்கு இன்னும் ஒரு படி நெருக்கமாக கொண்டு செல்கிறது
