-முகம்மத் இக்பால்,
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தலைமையிலான புதிய ஆட்சியில் கடந்த காலத்தில் நடைபெற்ற சில முக்கிய கொலைகள் பற்றிய விசாரணைகளை மீள ஆரம்பித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
அதில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், மத்திய வங்கி பிணைமுறி விவகாரம், வசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதூங்க கொலை, கேலிச் சித்திர செய்தியாளர் பிரதீப் எக்னளிகொட கொலை, ஊடகவியலாளர் ஸ்ரீராம் படுகொலை மற்றும் சில ஊடகவியலாளர்கள் காணாமல் போனமை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை போன்றன விசாரணை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
இங்கே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணையில்தான் பாரிய சிக்கல் உள்ளது. அதாவது அதில் சீருடைத் தரப்பாரும் சம்பத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவ்வாறு நீதியான மூறையில் விசாரிக்கப்படுகின்றபோது அதற்கு எதிராக தடைகள் ஏற்படலாம். சிலநேரம் ஜனாதிபதிக்கு அது ஆபத்தாகவும் முடியலாம் என்று கூறப்படுகின்றது.
நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஈஸ்டர் தாக்குதலுக்கு சஹ்றான் குழுவினர் மாத்திரம்தான் காரணமென்று கூறுகின்றோம். ஆனால் அதில் தோண்டத் தோண்ட பாரிய புயதயல்கள் உள்ளதாக அஞ்சப்படுகின்றது.
இதில் பிள்ளையான் என்னும் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் சம்பந்தப்பட்டுள்ளதாக அவருடன் செயற்பட்ட மருதமுனையை சேர்ந்த மௌலான என்பவர் கடந்த வருடம் ஊடகங்களுக்கு ரகசியத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனாலும் சம்பவம் நடைபெற்றபோது பிள்ளையான் சிறையில் இருந்ததன் காரணமாக சட்டப்படி அவரை தண்டிக்க முடியாது. அதாவது அந்த படத்தை தயாரித்தவர்கள் பிள்ளையானியன் தலையில் அனைத்தையும் பாரம் கொடுத்துவிட்டு தப்பிக்க முடியாது என்பது அதன் பொருளாகும்.
ஆனாலும் சம்பவம் நடைபெற்றதிலிருந்து முஸ்லிம்கள் கடுமையாக பழிவாங்கப்பட்டார்கள். நீதி விசாரனை மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வந்து முஸ்லிம்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதனை நீதிமன்றம் மூலமாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பாகும்.