கனடாவின் புள்ளிவிவரவியல் திணைக்களம், செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் குறித்த தகவல்களை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வல்லுநர்கள் கடந்த மாதம் ஆண்டு பணவீக்கத்தில் மற்றொரு சரிவைக் கணித்துள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் இரண்டு சதவீதமாகக் குறைந்திருந்தது.
ஆகஸ்ட் மாத பணவீக்கம் கனடிய மத்திய வங்கியின் இலக்குடன் ஒத்துப் போவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செப்டம்பர் பணவீக்க அறிக்கை எதிர்வரும் அக்டோபர் 23 அன்று மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித முடிவுக்கு முன் கடைசி முக்கிய பொருளாதார தரவு என்பது குறிப்பிடத்தக்கது.