கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாரியோ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமைகளினால் 100 மில்லியன் டொலர் வரையில் நட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய காப்புறுதி கூட்டமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரொறன்ரோ பெரும்பாகப் பகுதிகளிலும், தென் ஒன்றாறியோ பகுதியிலும் கடுமையான மழை வெள்ள நிலை ஏற்பட்டது.
இந்த காலநிலை சீர்கேடு காரணமாக கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது.
இவ்வாறு காலநிலை அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்களின் மொத்த தொகை மதிப்பீடு 100 மில்லியன் டாலர்களை கடந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17 18 ஆம் திகதிகளில் கடும்மழை, இடி, மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்களினால் பாதிப்புகளை மக்கள் எதிர்நோக்கி இருந்தனர்.
குறிப்பாக மிசிசாகா, இடோபிகொக் மற்றும் ரொறன்ரோ பெரும்பாகப் பகுதிகளில் கூடுதல் சேதங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்த ஆண்டில் ஒன்றாரியோ மாகாணத்தில் காலநிலை சீர்கேடுகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.