கனடாவில் கடத்தல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் மார்க்கம் பகுதியில் வைத்து நபர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார்.
மார்க்கம் கொமர்ஷியல் பிளாசா பகுதிக்கு அருகாமையில் நின்றிருந்த நபர் இவ்வாறு கடத்தப்பட்டிருந்தார்.
குறித்த நபரை மூன்று பேர் பலவந்தமாக வாகனம் ஒன்றில் கடத்திச் சென்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடத்தல் சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலத்திற்குள், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட நபர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
என்ன காரணத்திற்காக இந்த நபர் கடத்தப்பட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
29, 19 மற்றும் 22 வயதான மூன்று பேர் இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்பு பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.