வரலாற்றில் முதன்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக பெண் அதிகாரி ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலை என்பவரே பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அவர் 2007ஆம் ஆண்டில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக சேவையில் இணைந்ததுடன் ருஹுனு பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை விஞ்ஞான பட்டத்தையும் திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.