கடலில் மீன்பிடிக்க போன கடலூர் மீனவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.. வலையை கடலில வீசியதுமே, மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அதேசமயம், மிகப்பெரிய சங்கடத்துக்கும், கவலைக்கும் ஆளாகியிருக்கிறார்கள். என்ன நடந்தது மீனவர்களுக்கு?
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 49 மீனவ கிராமங்கள் இருக்கின்றன.. இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இவர்கள் எப்போதுமே, நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில், துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்குள் செல்வார்கள்
அப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பு, தேவனாம்பட்டினத்திலிருந்து கடலுக்குள் சென்றார்கள். ஆனால், திரும்பி கரைக்கு வரும்போது, அதிக அளவில் மீன்களை அள்ளிக் கொண்டு வந்துவிட்டனர். பெரும்பாறை: அதிலும் "பெரும்பாறை" என்ற பெரிய வகை மீன்கள் கிடைப்பதே அரிதான விஷயமாகும்.
இப்போது நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் 200 டன் அளவிற்கு பெரும்பாறை மீன்கள் கிடைத்திருக்கிறது.. இதைப்பார்த்ததுமே மீனவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கியது.. ஆனாலும், அந்த மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது... இதனால் வலையில் 200 டன் மீன்களை பிடித்துவிட்டு, எப்படி கரைக்கு எடுத்த வருவது என தெரியாமல் விழித்தனர்.
இதையடுத்து, 100-க்கும் மேற்பட்ட சிறிய பைபர் படகுகள் கடலுக்கு வரவழைக்கப்பட்டு, அவைகளில் மீன்களை வைத்து, கரைக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள் மீனவர்கள். அதுமட்டுமல்ல, வழக்கமான நாட்களில் கிலோ 400 ரூபாய் வரை விற்கப்படும் பெரும்பாறை, இன்று வெறும் ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறதாம்.
அள்ளிய மீனவர்கள்: கடலூர் மக்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களிலிருந்தும், மீன் வியாபாரிகள் கடலூருக்கு வந்து மீன்களை அள்ளி செல்கிறார்கள்.. எப்போதுமே, பெரிய மீன்கள் கிடைக்காத காரணத்தினால்தான், அதற்கான டிமாண்டுகள் மார்க்கெட்டுகளில் அதிகமாகும்.
ஆனால், பெரிய மீன்கள் கிடைத்தாலும், அதனை கரைக்கு கொண்டு வருவது பெரும் பிரச்சனையாகிவிடுகிறது என்று நொந்து கொள்கிறார்கள் மீனவர்கள்.. அதுமட்டுமல்ல, மீன்பிடிக்கும் வலையில், 10 முதல் 15 டன் மீன்கள் கிடைப்பதே கடினமாக உள்ளபோது, நூற்றுக்கணக்கான டன் கிடைப்பதால் என்ன செய்வது, அதையெல்லாம் என்ன செய்வதென்றும் தெரியவில்லையாம். 200 டன் மீன்: நேற்றுகூட தாவணாம்பட்டினம் மீனவர்கள் வலையில் 150 டன் அளவு மீன்கள் கிடைத்துள்ளது.
ஆனால், வெறும் 50 டன்கள் மீன்களை மட்டுமே கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.. மற்ற மீன்களை கடலிலேயே போட்டுவிட்டு வந்துவிட்டார்களாம். இப்போது, மறுபடியும் 200 டன் மீன் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
புரட்டாசி: தற்போது புரட்டாசி நடந்து கொண்டிருப்பதால், மீன் விற்பனையில் நல்ல லாபத்தை பார்க்க முடியாமல் தமிழக வியாபாரிகள் கலங்கி போயிருக்கிறார்கள். நேற்றைய தினம், சீலா மீன்கள் கிலோ ரூ.700, விளைமீன், ஊளிமீன், பாறை மீன் போன்றவை தலா ரூ.250க்கு விற்பனை ஆகியிருக்கின்றன.. வங்கனை ஒரு கூடை 1800 ரூபாய், சூப்பர் நண்டு ஒரு கிலோ 400 என்று விற்பனை ஆனது.. இப்படி மீன்களின் விலை வீழ்ச்சி காரணமாக வியாபாரிகள் கவலைக்குள்ளானாலும், புரட்டாசி முடிந்ததும் இந்த நிலைமை மாறும் என்று நம்புகிறார்கள்.