உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டு தொகையில் 65 மில்லியனை செலுத்தியுள்ளதாக தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
தனது சட்டத்தரணி ஊடாக அவர் இதனை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் ஆராயப்பட்ட அடிப்படை மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் நிலாந்த ஜெயவர்த்தன 75 மில்லியன் ரூபாய்களை செலுத்தவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் முன்னர் 10 மில்லியன் ரூபாயினை செலுத்தியிருந்ததாக நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார் தற்போது 65 மில்லியனை செலுத்தியுள்ள நிலையில் அவர் முழு இழப்பீட்டுதொகையையும் செலுத்தியுள்ளார்.
ஜனவரி 2023ம் திகதி உயர்நீதிமன்றம் 2019 ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களிற்கு இழப்பீடாக அரசாங்கம் 1 மில்லியனை செலுத்தவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
2019ம் ஆண்டு தாக்குதலை தடுக்க தவறினார்கள் எனமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் மனுதாரர்களின் அடிப்படை உரிமையை மீறிவிட்டனர் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.