கனடிய பிரதமர் பிரான்சிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பிரான்கோபொயின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இவ்வாறு பிரான்சிற்கு விஜயம் செய்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற உள்ள மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் காலகட்டத்தில் பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து அவர் இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் கூட்டணி இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் உலகத் தலைவர்களை வரவேற்றுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலைக்கு மத்தியில் இந்த மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த மாநாட்டிற்கு கனடிய வெளிவகார அமைச்சர் மெலனி ஜோலியும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது