கனடாவின் ரொறன்ரோ பகுதியில் 13 வயதான சிறுவன் ஒருவன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
54 வயதான நபர் ஒருவரை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த மாதம் 1ம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்கு மற்றும் ஜெயின் வீதிகளுக்கு இடையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கத்தி குத்துக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.