காணாமல் போயிருந்த முதியவர் ஒருவர் மகாவலி கங்கையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி திஸ்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த ஆறு நாட்களாக காணாமல் போயிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.