முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு தற்போது விடுபாட்டுரிமை இல்லை என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மத்தியவங்கி திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்க பதவி வகித்ததால் அவருக்கு விடுபாட்டுரிமை காணப்பட்டதால் முன்னர் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ரணில்விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியில்லை அவருக்கு தற்போது விடுபாட்டுரிமையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்திற்கு ரணில்விக்கிரமசிங்கவை நீதிமன்றத்தின் அழைப்பதற்கான அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சரவை பேச்சாளர் தற்போது சிங்கப்பூரில் அடைக்கலம் புகுந்துள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.