கனடாவின் வருமான முகவர் நிறுவனம் நாட்டு வரி செலுத்துவோரிடம் ஆலோசனை கோரியுள்ளது.
எவ்வாறு தமது சேவையை மேம்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான பொது மக்களின் ஆலோசனை கோரும் நடவடிக்கை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது பின்னூட்டங்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி வரையில் கனடியர்கள் வருமான முகவர் நிறுவனம் தொடர்பிலான கருத்துக்களை வெளியிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவைகள் தொடர்பிலும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் தங்களது கருத்துக்களை வெளியிடுமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்கனவே ஆலோசனைகள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.