ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ ஜெனரல் தயா ரத்நாயக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.
இன்று ( 29) எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவை சந்தித்ததன் பின்னர் ஓய்வுபெற்ற ஜெனரல் தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொது கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக தயா ரத்நாயக்கவை நியமித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ், இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் தயா ரத்நாயக்க பணியாற்றினார்.