கனடாவில் ஓநாய் தாக்கி சிறுமியொருவர் காயமடைந்துள்ளார்.
இவ்வாறு காயமடைந்த சிறுமி அல்பேர்ட்டா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் மேற்கொண்ட ஓநாய் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஓநாய் தாக்க முயற்சிக்கும் போது சத்தமாக குரல் எழுப்ப வேண்டுமெனவும், ஏதேனும் பொருட்களை ஓநாய் மீது வீசி எறிய வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஓநாயைக் கண்டதும் பயந்து ஓடினால் அது வேகமாக துரத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்கரியில் அடிக்கடி இவ்வாறு ஓநாய்களின் தொல்லை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.