வருடாந்த பட்டத்திருவிழா ஆரம்பிக்கும் நிகழ்வாக முல்லைத்தீவு கடற்கரையில் திங்கட்கிழமை (28) வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்துள்ளனர்.
இந் நிகழ்வின் போது முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழீழ வரைபடம் மற்றும் கார்த்திகை பூ அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளதை அவதானித்த முல்லைத்தீவு பொலிஸார் அவ் இடத்திற்கு சென்று குறித்த இளைஞனை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.