ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதக் குழு தேசிய மக்கள் சக்தியின் (NPP) கூட்டாளிகள் என்றும் உண்மையில் மார்க்சிஸ்டுகளுக்கு நிதி வழங்கியவர்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் முக்கிய சந்தேக நபரான இப்ராஹிம், NPP தேசிய பட்டியலில் இருந்தார். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் தந்தையும் NPP தேசியப் பட்டியலில் இருந்தார். இந்த குழு மில்லியன் கணக்கான ரூபாய்களை NPP க்கு நிதியளித்துள்ளது.
இந்த நாட்டில் உள்ள கத்தோலிக்கர்கள் வாக்களிக்கும் போது இந்த உண்மையை நினைவில் கொள்ள வேண்டும், ”என்று லான்சா புதிய கூட்டணியின் தொடக்க பேரணியின் போது கூறினார்.
“என்பிபி தலைவர்கள் ஒரு சதவீதம் கூட வரி செலுத்தவில்லை. எங்களைப் போல் ஒரு இளைஞருக்குக்கூட அவர்கள் வேலை வழங்கவில்லை. இதற்குக் காரணம், அவர்களுக்குச் சொந்தமாக எந்த நிறுவனங்களும் இல்லை. அவர்கள் வேலையில் இல்லை. இருப்பினும், அவர்கள் எங்களில் எவரையும் விட வசதியான வாழ்க்கையை நடத்துகிறார்கள், ”என்று அவர் கூறினார்.