வரி செலுத்தத் தகுதியான அனைவரும் 2023/2024 ஆண்டுக்கான வருமான வரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த கால அவகாசத்துக்குள் வரி செலுத்தத் தவறினால் அபராதம் மற்றும் வட்டி அறவிடப்படுவதோடு, தள்ளுபடி செய்யப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, நிலுவையில் உள்ள அனைத்து இயல்புநிலை வரிகளையும் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதியன்று அல்லது அத்திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் 1944 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ளலாம் அல்லது அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்துக்கு சென்று மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.