நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 38,874 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.