அம்பாந்தோட்டை - தங்காலை பிரதான வீதிக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (26) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் இவர் உயிரிழந்து பல நாட்கள் ஆகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவரது காலின் ஒரு பகுதியை மிருகங்கள் கடித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.