கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர இன்று (25) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்தே அந்த பதவிக்கு பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்படவுள்ளார்.
பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 முதல் 2023 வரை கடமையாற்றியுள்ளார்.
இவர் ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவார்.